
பாக்கு தட்டு உற்பத்தி மூலம் மாதம் 2,00,000 வரை சம்பாதிக்கும் கேரள தம்பதி
கேரள தம்பதிகளான தேவகுமாரும் சரண்யாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள தங்கள் நிறுவன வேலையை விட்டுவிட்டு, பாப்லா என்ற ஒரு முயற்சியைத் தொடங்கினார்கள், இது பாக்குமர இலை உறைகளில் இருந்து நிலையான டேபிள்வேர், க்ரோ பேக்ஸ் மற்றும் பலவற்றைத் தயாரிக்கிறது.
பொறியாளர் தேவகுமார் நாராயணன் வெளிநாடு சென்று பணிபுரியும் ஆசையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணி செய்து வந்தார்.நான்கு ஆண்டுகளில் 9-5 கார்ப்பரேட் வேலைகளில் ஈடுபட்டு, வேகமான வாழ்க்கையை நடத்தினார். அவரது மனைவி சரண்யா அவருடன் இணைந்த சிறிது நேரத்திலேயே, அவரது பணி சுமையும் வேகமான வாழ்க்கை முறையும் அந்தத் தம்பதியினருக்கு தங்கள் தாயகமான கேரளாவுக்குத் திரும்புவதற்கான வலுவான விருப்பத்தை ஏற்படுத்தியது.
எனவே 2018 இல், சொந்தமாக தொழில் தொடங்கும் எண்ணத்தில் கேரளாவில் உள்ள சொந்த ஊரான காசர்கோடு திரும்பினார்கள்.

“நாங்கள் கேரளா திரும்பிய நாள் முதல் எதாவது சொந்த தொழில் செய்ய ஆர்வமாக இருந்தனர்.ஆனால் அது என்னவாக இருக்கும் என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை. எனவே எங்கள் ஆர்வங்களுடன் பொருந்தக்கூடிய யோசனைகளைக் கண்டறிய அதற்க்கான தேடல்களை தொடங்கினோம். ஒரு நல்ல விஷயமும் சமூகப் பொறுப்பும் கொண்ட வணிகமாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்,” என்று சரண்யா தி பெட்டர் இந்தியாவிடம் கூறுகிறார்.
உற்பத்தித் துறையில் நுழைய முடிவுசெய்து, அவர்கள் உள்நாட்டில் கிடைக்கும் மற்றும் இயற்கையான மூலப்பொருளைத் தேடத் தொடங்கினர்.
“நிறைய விருப்பங்களை பரிசீலித்த பிறகு, நாங்கள் அதை பாலா என்று உள்நாட்டில் அறியப்படும் பாக்கு மர இலைகளை தேர்வுசெய்தோம். காசர்கோடு பகுதியில் பாக்கு மரங்கள் ஏராளமாக வளர்வதால், விளைபொருட்களை எளிதாக பெற முடிகிறது. மேலும், அவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவை, மக்கும் தன்மை கொண்டவை மற்றும் பிளாஸ்டிக்கிற்கு நல்ல மாற்று” என்கிறார் தேவகுமார். இறுதியாக பாக்கு மரத்திலிருந்து இலைகளை கொண்டு பொருட்களை தயார் செய்வது என்று முடிவு செய்தனர்.பிறகு, அவர்கள் தங்கள் வணிக நோக்கத்துடன் இணைந்த பிராண்ட் பெயரைத் தேடத் தொடங்கினர். “பிளாஸ்டிக் மற்றும் காகிதத்திற்கு பாக்கு இலை பொருட்கள ஒரு நல்ல மாற்றாக இருக்கும் என்று கருதினர்.”less paper and less plastic,”குறைவான காகிதம் மற்றும் குறைந்த பிளாஸ்டிக் என்ற யோசனையை இணைத்து அதற்கு ‘பாப்லா’ என்று பெயரிட்டோம்,” என்கிறார் சரண்யா.

2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாப்லா சிறு நிறுவனம், இப்போது மேசைப் பாத்திரங்கள் முதல் பாக்குமரத்தின் இலை உறைகளில் இருந்து வளரும் பைகள் வரையிலான தயாரிப்புகளை உற்பத்தி செய்து, மாதத்திற்கு ரூ. 2 லட்சம் வருவாய் கிடைக்கிறது.
தேவகுமாரும் சரண்யாவும் விரைவில் மடிகை பஞ்சாயத்தில் தங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு சிறிய உற்பத்தி நிறுவனம் ஒன்றை நிறுவினர், அதில் இப்போது ஏழு பணியாளர்கள் உள்ளனர் என்று தேவகுமார் கூறுகிறார்.
“நாங்கள் பாக்குமரத்தின் நார்களை பெரும்பாலும் காசர்கோடில் இருந்தும், சில சமயங்களில் கர்நாடகாவிலிருந்தும் பெறுகிறோம். அவற்றின் தரத்தை உறுதிசெய்த பிறகு அவற்றை வாங்குகிறோம், மேலும் பல்வேறு தரத்தின் அடிப்படையில் தயாரிப்பாளர்களுக்கு பணம் செலுத்துகிறோம், ”என்று அவர் விரிவாகக் கூறுகிறார்.
பாக்கு மரங்களின் பூக்கும் காலத்தில்தான் மட்டைகள் கிடைக்கும் என்கிறார் சரண்யா. “பாக்கு மரத்தின் இலை மட்டைகளை பயன்படுத்தும்போது ஏற்படும் சவால்கள் ஏராளம்,ஏனென்றால் அவை பருவகாலத்தில் மட்டுமே கிடைக்கும். ஒரு வருடத்தில் ஆறு மாதங்களுக்கு மட்டுமே நாம் அவற்றைப் பெற முடியும். எனவே, ஆண்டு முழுவதும் போதுமான அளவு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு எங்கள் யூனிட்டுடன் சேர்த்து நாங்கள் அமைத்துள்ள பெரிய சேமிப்பு இடம் தேவைப்படுகிறது.
பாப்லாவின் தயாரிப்புகளில் பெரும்பாலும் தட்டுகள், கிண்ணங்கள், ஸ்பூன்கள் போன்ற மேஜைப் பாத்திரங்கள் அடங்கும். “எங்களிடம் 4 அங்குலங்கள் முதல் 10 அங்குலம் வரையிலான தட்டுகள், ஆழமற்ற மற்றும் ஆழமான கிண்ணங்கள், ஸ்பூன்கள் போன்ற பல்வேறு அளவுகள் மற்றும் வடிவங்களில் மேஜைப் பாத்திரங்கள் உள்ளன.

மேஜைப் பொருட்களைத் தவிர, கையால் செய்யப்பட்ட சோப்புகள், பேட்ஜ்கள், தொப்பிகள், கை-விசிறிகள், க்ரோ பேக்குகள் மற்றும் திருமண அழைப்பிதழ்களுக்கான பேக்கேஜிங்கையும் பாப்லா தயாரிக்கிறது.பாக்கு மட்டைகள் விரைவில் மக்கும் தன்மையுடையது என்பதால் நீண்ட நாட்களுக்கு உறுதியளிக்க முடியாது. மீண்டும் நடவு செய்யக்கூடிய ஒரு செடி அல்லது மரக்கன்றுகளை பரிசாக அளிக்கும் போது அவற்றை தற்காலிகமாக பயன்படுத்த பரிந்துரைக்கிறோம்,” என்று அவர் கூறுகிறார்.
ரூ.1.50 முதல் ரூ.10 வரையிலான டேபிள்வேர், பாப்லாவின் சிறந்த விற்பனையாகும். க்ரோ பேக் போன்ற கையால் செய்யப்பட்ட பொருட்களின் விலை ரூ. 40 மற்றும் தொப்பிகள் ரூ. 100 வரை விற்பனை செய்யப்படுகிறது. “நாங்கள் எங்கள் இணையதளம் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் ஆர்டர் செய்கிறோம்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

சமீபத்தில், இந்த இலை மட்டைகளில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்களையும் முயற்சி செய்தோள்ளோம். “நாங்கள் திருமண அழைப்பிதழ்களை காகிதத்திற்குப் பதிலாக உறைகளில் UV பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அச்சிடுகிறோம். இது தவிர, நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளுக்கான பேட்ஜ்களை உருவாக்கும் போது அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும்,வழக்கமான பிளாஸ்டிக் குறிச்சொற்களுக்கு இது ஒரு நல்ல மாற்றாகும்” என்கிறார் சரண்யா.
“எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதைத் தவிர, பல சிறிய உள்ளூர் நிறுவங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்த இடமளித்து உதவுகிறோம். இந்தப் பகுதியில் இதே போன்ற சுமார் 20 யூனிட்கள் உள்ளன, அவை தங்கள் தயாரிப்புகளை விற்க சந்தைகளைக் கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கின்றன.எனவே அவர்களுக்கு பயிற்சி அளித்து உதவுவதன் மூலம் அவர்களின் தயாரிப்பு தரத்தை மேம்படுத்த உதவுகிறோம், அத்துடன் சந்தையைக் கண்டறிகிறோம்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
சிறிய அளவில் தங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதாகவும், இறுதியில் கைவினைப் பொருட்களாகவும் தங்கள் முயற்சியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தம்பதியர் கூறுகிறார்கள்.
“நாங்கள் இப்போது எங்கள் தயாரிப்புகளுக்கு ஒரு பரந்த சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டுள்ளோம். மேலும், வாழை நார்கள், தேங்காய் மட்டைகள் போன்ற பல்வேறு இயற்கை மூலப்பொருட்களை நாங்கள் முயற்சி செய்ய விரும்பினோம்,” என்று கூறுகின்றனர்.
கேரள தம்பதிகளான தேவகுமாரும் சரண்யாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள தங்கள் நிறுவன வேலையை விட்டுவிட்டு, பாப்லா என்ற ஒரு முயற்சியைத் தொடங்கினார்கள், இது பாக்குமர இலை…