ரோஜா குல்கந்து சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

எல்லோரும் இப்போது இயற்கை மருந்துகளை நாட தொடங்கிவிட்டார்கள். மணப்பாகு போன்று ரோஜா குல்கந்து குறித்த விழிப்புணர்வும் அதிகரித்திருக்கிறது.
உடல் ஆரோக்கியம் குன்றிய பிறகு மருத்துவரை அணுகினால் தான் நோய் தீரும். ஆனால் ஆரம்ப கட்டங்களில் உடலில் குறைபாடு உண்டாகும் போது கை வைத்தியம் மூலமே அதை முழுமையாக சரிசெய்துவிடமுடியும்.

मधुमेह से लेकर सेक्शुअल क्षमता बढ़ाने तक में असरदायक है रोज गुलकंद - Fir  Post


மலரில் மென்மையான ரோஜா கூந்தலில் சூடி கொள்வதோடு சருமத்துக்கும், கூந்தலுக்கும் அழகுபடுத்த உதவுவதோடு, உடல் ஆரோக்கிய குறைபாட்டை நிவர்த்தி செய்யவும் உதவும். ரோஜாவில் தயாரிக்கப்படும் ரோஜா குல்கந்து எப்போதும் வீட்டில் வைத்திருந்தாலே போதும். பலவிதமான குறைபாட்டை தீர்த்துவிட முடியும். ரோஜா குல்கந்துவை எப்படி செய்யலாம் என்பது பார்க்கலாம்.
ரோஜா குல்கந்து என்பது ரோஜா மலரிலிருந்து தயாரிக்கப்படும் மருத்துவ குணம் வாய்ந்த மருந்து. இது துவர்ப்பு, இனிப்பு சுவையை சேர்ந்தது.

தேவையானவை

ரோஜா பூ – 30 பூக்கள் ( நாட்டு பூ பன்னீர் பூவாக இருக்க வேண்டும்)

பெரிய கற்கண்டு – 100 கிராம்

தேன் – 100 கிராம்

குங்குமப்பூ – 5 கிராம்

வெள்ளரி விதை-10 கிராம்

கசகசா -10 கிராம்

நுரையீரல் சளி, கோழை, சைனஸ், ஆஸ்துமா அனைத்தும் அகற்றும் ஒரு மூலிகை, எப்படி பயன்படுத்துவது!

செய்முறை

ரோஜாபூ பூச்சிகொல்லி அடிக்காத மலராக இருக்க வேண்டும். அந்த பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து நீரில் அலசி எடுக்கவும். நீர் உலரும் வரை வைத்திருந்து கற்கண்டையும், ரோஜா இதழ்களையும் உரலில் இட்டு இடிக்கவும். சிலர் மிக்ஸியில் இட்டு மைய அரைப்பார்கள். ஆனால் உரலில் இட்டு இடிப்பதுதான் நல்லது. இவை நன்றாக கலந்ததும் எஞ்சியிருக்கும் பொருள்களான வெள்ளரிவிதை கசகசா சேர்த்து ஒரு இடி இடித்து சுத்தமான கண்ணாடி பாட்டிலில் வழித்து எடுக்கவும்.

முதலில் சிறிது தேன் பிறகு இடித்த விழுது சேர்த்து பிறகு குங்குமப்பூ சேர்க்கவும். இதே போன்று தேன், இடித்த விழுது, குங்குமப்பூ மாறி மாறி சேர்த்து நன்றாக கலந்தால் எல்லா பொருள்களும் நன்றாக கலந்துவிடும். இதன் வாயிலில் துணி கட்டி அப்படியே வெயிலில் வைத்து நன்றாக கிளறி விடவும். தொடர்ந்து 5 நாட்கள் வரை வெயிலில் வைத்து எடுக்கலாம். ரோஜா குல்கந்து தயார். இதை பீங்கான் பாட்டிலில் எடுத்துவையுங்கள்.

Gulkand Benefits in Hindi : गुलकंद के फायदे - India News

எப்படி சாப்பிடலாம்
வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை எடுத்துகொள்ளலாம். பெரியவர்கள் 2 டீஸ்பூன் அளவும், சிறியவர்களுக்கு 1 டீஸ்பூன் அளவும் கொடுக்க வேண்டும்.

தினமும் வெறும் வயிற்றில் இதை எடுத்துகொள்ளலாம். வளரும் பிள்ளைகளுக்கு பாலில் கலந்து மில்க் ஷேக் போன்று கொடுக்கலாம். வெற்றிலையின் உள்ளே வைத்தும் பீடாவில் சேர்த்து சாப்பிடலாம். பாலில் அப்படியே கலந்தும் குடிக்கலாம். தினமுமே இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
ரை அனைவருக்குமே மலச்சிக்கல் இருக்கும் போது ரோஜா குல்கந்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும். மலச்சிக்கல் இருக்கும் போது வெந்நீரில் குல்கந்தை கலந்து குடித்து வந்தால் மலம் இளகி மலச்சிக்கல் குறையும். தினமும் இரவில் இதை சாப்பிட வேண்டும். கர்ப்பிணிகளும் மலச்சிக்கல் இருக்கும் போதும் வயிறு சம்பந்தமான பிரச்சனை உண்டாகும் போதும் வெந்நீருடன் இதை சாப்பிட்டு வரலாம்

Roja Gulkand || 'ரோஜா குல்கந்து' இதன் பலன்கள் தெரியுமா?


வயிறு பிரச்சனை, வாயு கோளாறுகள், வயிற்றுப்புண், செரிமானக்கோளாறுகள் என அனைத்தையும் போக்க ரோஜா குல்கந்து உதவும். இது காரத்தன்மை கொண்டுள்ளதால் வயிற்றில் இருக்கும் செரிமானத்துக்கு உதவும் அமிலங்களின் சமநிலையை சீர் செய்கிறது. வயிறு மந்தமாக இருக்கும் போது குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பார்கள்.
அவர்களுக்கு காலை வேளையில் ஒரு டீஸ்பூன் அளவு ரோஜா குல்கந்து கொடுத்துவந்தால் செரிமானக்கோளாறுகள் சீராகி பசியின்மை பிரச்சனை நீங்கும். நன்றாக பசி எடுத்து குழந்தைகள் சாப்பிட செய்வார்கள். பெரியவர்கள் ஜீரணகோளாறுகளை கொண்டிருந்தால் அவர்களும் தொடர்ந்து 21 நாட்கள் இதை சாப்பிட்டால் ஜீரண மண்டலம் சீராக செயல்படும்.

பித்தம் நீக்கும்
த்தம் பிரட்டலோடு இருக்கும் போது அதை போக்க ரோஜா குல்கந்து உதவும். பித்தம் அதிகமாகும் போது கிறுகிறுப்பு, வாந்தி, குமட்டல் உணர்வு போன்றவை உண்டாக கூடும். இதற்கு ரோஜா இதழ்களை கொதிக்க வைத்து ருசிக்கு நாட்டு சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை குடித்துவந்தால் பித்தம் நீங்கும். அதற்கு மாற்றாக ரோஜா குல்கந்து எடுத்துகொள்ளலாம். இது பித்த பிரட்டலை குறைக்க செய்யும்.
ரோஜா குல்கந்து ஆண்மை பெருக்கி என்றும் அழைக்கப்படுகிறது.ஆண்களின் உடலுக்கு வலிமை கிடைக்க இவை உதவுகிறது. இன்று கணினியில் பணி புரியும் ஆண்கள் உடல் உஷ்ணம் அதிகரிக்கும் போது விந்தணுக்கள் எண்ணிக்கை வீரியம் குறையக்கூடும். உணவு முறை, வாழ்க்கை முறை மோசமாக கடைபிடிக்கும் ஆண்களுக்கு இது மலட்டுத்தன்மையை உண்டாக்கவும் வாய்ப்புண்டு.
ஆனால் இந்த குறைபாடு உண்டாவதற்கு முன்பே இரவில் பாலில் குல்கந்து கலக்கி கொடுத்தால் விந்தணுக்கள் எண்ணிக்கை குறையாமல் இருக்கும் . வீரியம் அதிகமாக இருக்கும். ஆண்மை குறைபாடு உண்டாகாது. பெண்களுக்கு வெள்ளைப்படுதல், மாதவிடாய் கால வயிறு வலி போன்ற உபாதைகளை குறைக்கவும் இது உதவுகிறது.
துவர்ப்பு சுவை கொண்டுள்ளதால் ரோஜா குல்கந்து ரத்த குழாய்களுக்கும் இதயத்துக்கும் கல்லீரலுக்கும் நன்மை செய்யும். இது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.மன அழுத்தம் போக்கும் மருந்தாகவும் இவை செயல்படுகிறது.

இரவில் தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் காய்ச்சி ஆறவைத்த பாலில் ஒரு டீஸ்பூன் அளவு ரோஜா குல்கந்து கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும். ரோஜா குல்கந்து சாப்பிடுவதால் இது சருமத்தில் சுருக்கங்களை அண்டவிடாமல் சரும பளபளப்பை அதிகரிக்கும்.

மசக்கை வாந்திக்கு தீர்வு தரும் பக்கவிளைவில்லாத மாதுளை மணப்பாகு! தயாரிப்பும் பயனும்!

குறிப்பு

ரோஜா குல்கந்து தயாரிக்கும் போது பயன்படுத்தும் தேன் சுத்தமானதாக இருக்க வேண்டும். ரோஜா நாட்டு ரோஜாவாக இருக்க வேண்டும். அப்போதுதான் பயன் இருக்கும்

எல்லோரும் இப்போது இயற்கை மருந்துகளை நாட தொடங்கிவிட்டார்கள். மணப்பாகு போன்று ரோஜா குல்கந்து குறித்த விழிப்புணர்வும் அதிகரித்திருக்கிறது.உடல் ஆரோக்கியம் குன்றிய பிறகு மருத்துவரை அணுகினால் தான் நோய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *